கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் செய்வதில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக சில பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து பொறியியல் பிரிவு உதவி பொது மேலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் செய்வதில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் பண்ணையில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டு போனது. இதுதொடர்பாக விசாரித்த போது எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை.
இதையும் படிங்க;- விதைப் பையை நசுக்கி சித்ரவதை.. இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்.. கொதிக்கும் வைகோ..!
undefined
இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது. இதை வாங்கி சென்ற பொது மக்கள் வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு கடைகளில் திருப்பி கொடுத்தனர். அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வினியோகிக்கப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக கூறி பொதுமக்கள் சென்று கடைகளுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;- தயிர் பாக்கெட்டில் தஹி என அச்சிட இயலாது... மத்திய அரசின் முடிவை ஏற்க தமிழக அரசு மறுப்பு!!
இந்நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பால் வினியோகம் செய்வதில் இன்றும் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய ஆவின் நிர்வாகம், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக சில பகுதிகளுக்கு பால் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் பிரிவு உதவிப் பொது மேலாளரை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.