12ம் வகுப்பு முதல் ஐஐடி, ஐஐஎம் வரை.. மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை மாநகராட்சி

Published : Mar 29, 2023, 02:57 PM IST
12ம் வகுப்பு முதல் ஐஐடி, ஐஐஎம் வரை.. மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை மாநகராட்சி

சுருக்கம்

சென்னை மாநகராட்சியின் 2023 - 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் 2023-2024-ம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.4,131.70 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4466.29 கோடியாகவும், மூலதன வரவு ரூ.3554.50 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3554.50 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சென்னை மாநகராட்சி ரூ.334 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ரூ.788 கோடியாக இருந்தது. திருத்திய திட்ட மதிப்பீட்டில் இது ரூ.517 கோடியாக உள்ளது.

*மக்களை தேடி மேயர்’ என்ற திட்டம் மூலம் பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம்.

*கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்வு.

*பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்.

*சென்னை பள்ளிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

*11ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்து செல்லப்படும்.

*10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு carrer guidance programme நடத்தப்படும்.

*நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக கற்றல் பயிற்சி வழங்கப்படும்.

*கலைத்திருவிழா போன்ற இசைப்போடிகளில் பர்சுகளை வென்று முன்னிலையில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு இசைக்கருவிகள் வழங்கப்படும்.

*ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்த அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பினை வழங்கி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் புலமையை மேம்படுத்துவது மட்டுமில்ன்றி தலைமை பன்மையும் உயர்த்த வழிவகை செய்யப்படும்.

*10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 3000 ரூபாயாக உயர்வு.

*10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் கல்வி சுற்றுலாவாக ஐஐடி-மெட்ராஸ், ஐஐஎம்-பெங்களூரு, டெல்லி பல்கலைக்கழ்கம் அழைத்து செல்லப்படுவர்.

*சர்வதேச விவகாரங்களில் மாணவர்களின் அறிவை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாதிரி ‘ஐக்கிய நாடுகள் சபை’ உருவாக்கப்படும்.

*சென்னை பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று JEE, CLAT, NEET, ஆகிய தேர்வுகளில் வென்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சியே செலுத்தும்.

இதையும் படிங்க..Google Pay, PhonePe or Paytm யூசருக்கு குட் நியூஸ்.. UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!