கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. அதேபோல், கடுமையான உடற்பயிற்சி காரணமாக மாரடைப்பு சம்பவமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
சென்னையில் இளம் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. அதேபோல், கடுமையான உடற்பயிற்சி காரணமாக மாரடைப்பு சம்பவமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
இதையும் படிங்க;- இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் 9 வயது சிறுமி திடீர் தூக்கிட்டு தற்கொலை.. அட கடவுளே.. இது தான் காரணமா?
இந்நிலையில், சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஆகாஷ் (25). ஜிம் பயிற்சியாளரான இவர், மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அதிக அளவில் ஸ்டீராய்டு ஊசி செலுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திடீரென ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு.!
இதனையடுத்து, உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் அதிகளவில் ஸ்டீராய்டு ஊசி செல்லுத்திக்கொண்டதால் 2 கிட்னியும் செயல் இழந்த நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.