ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சென்னை ரேஸ் கிளப்பிற்கு 1946 ஆம் ஆண்டு 160 ஏக்கர் 96 சென்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.614 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் 1970 ஆம் ஆண்டு முதல் வாடகையை உயர்த்துவது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாம்பலம்- கிண்டி தாசில்தார் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்: 22 நிமிடம் முன்பாக வந்து அசத்தல்!
இதற்கு பதிலளித்த ரேஸ் கிளப், ஆண்டுக்கு 614.13 ரூபாய் என, 99 ஆண்டுகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டது. முழு தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது. வாடகை உயர்வு தொடர்பாக, குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை என தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த அரசு, ரூ 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்பிற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு! ஏப்.2-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தொகையை கட்டத் தவறினால் மனுதாரரை காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.