LIC: சென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து - போராடிக் கட்டுப்படுத்திய தீயணைப்புப் படை

Published : Apr 02, 2023, 06:29 PM ISTUpdated : Apr 03, 2023, 12:55 AM IST
LIC: சென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து - போராடிக் கட்டுப்படுத்திய தீயணைப்புப் படை

சுருக்கம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று (ஞாயிறு) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று (ஞாயிறு) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த சம்பவ தீயணைப்புத் துறையினர் நவீன தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

14 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 14வது மாடியில் (மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள பெயர் பலகையில் மின்கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

மீன் உணவு பிரியர்களுக்கு எச்சரிக்கை! இந்த மீனைச் சாப்பிடும் முன் கொஞ்சம் யோசிங்க!

விரைந்து வந்து தீயணைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் தீ அடுத்தடுத்த தளங்களுக்கு மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இன்று விடுமுறை தினமாகவும் இருந்ததால் எந்த பெரிய அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதுப்படுவது எல்ஐசி கட்டிடம். லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்னும் எல்ஐசி நிறுவனத்தின் முக்கிய கிளை அலுவலகம் இது. தென்னிந்தியத் தலைமையகமாகவும் செயல்பட்டு வருகிறது. பரபரப்பான அண்ணா சாலையில் உள்ள இந்தக் கட்டிடம் 177 அடி உயரத்திற்கு எழும்பி நிற்கிறது. 1.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போதே இதனைக் கட்டுவதற்கு 90 லட்சம் ரூபாய் செலவானது.

4 வயதில் புத்தகம் எழுதி கின்னஸ் சாதனை படைத்த சிறுவனம்! 1000 பிரதிகளைத் தாட்டி விற்பனை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!