மயிலாடுதுறை அருகே கணவர் நகைகளை அடகு வைத்து குடித்ததால் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மல்லியம் ரயிலடி தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்(வயது 26). காரைக்காலில் உள்ள அழகு சாதன நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அதே அழகு சாதன நிலையத்தில் பணியாற்றிய காரைக்கால் சொரக்குடி மேல சுப்பராயபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்த இருதயராஜ் மகள் ஜெனிபர்(24) என்பவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒன்பது மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணேஷ், ஜெனிபர் அணிந்திருந்த தங்க நகைகளை ஒவ்வொன்றாக அடகு வைத்து மது அருந்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ஜெனிபர் நேற்று இரவு குழந்தையை தனது மாமியாரிடம் விட்டு விட்டு மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்றுள்ளார்.
undefined
கடனில் இருந்து தப்பிக்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிட் வீச்சு நாடகத்தை அரங்கேற்றிய பெண்
இன்று காலை வீட்டிலிருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது ஜெனிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெனிபரின் தாயார் பவுலின்(60) அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தைரியம் இருந்தால் தஞ்சையில் கால் வையுங்கள்; மத்திய அரசுக்கு விவசாயிகள் பகிரங்க எச்சரிக்கை
ஜெனிபருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் மயிலாடுதுறை ஆர்டிஓ. யுரேகா நேரில் விசாரணை மேற்கொண்டார். கணவரின் குடிப் பழக்கத்தால் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.