காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் , தற்போது அனைத்து குற்றவாளிகளும் காவி உடை போட்டுக் கொள்வதாகவும் மயிலாடுதுறை திராவிடர் கழக பரப்புரை கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடை வீதியில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசினார். அப்போது, வைக்கம் போராட்டத்திற்கும், மயிலாடுதுறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
100 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 40 பேர் பங்கெடுத்து கொண்டதாக அப்போதைய சுதேசி மித்ரன் நாளிதழில் பெயர் பட்டியல் உடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் மனிதாபிமானமின்றி மிருகங்களுக்காக மனிதனை தாக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
மிஸ்டு கால் கொடுத்து வளர்வதாக கூறிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியில் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளும், ஏமாற்று பேர்வழிகளுமே இணைந்து வருகின்றனர். குற்றவாளிகள் பாதுகாப்புக்காக அடைக்கலமாகும் இடம் பாரதிய ஜனதா கட்சியாக உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் காவி போர்த்திக் கொண்டு வலம் வருகின்றனர்.
சட்டக்கல்லூரி மாணவி மீது தாக்குதல்; குறிப்பிட்ட சமூகத்தினர் திரண்டதால் பரபரப்பு
சென்னையில் நடைபெற்ற சம்பவத்தில் தலை மறைவு குற்றவாளி ஒருவர் அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு சென்றார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினரைப் பார்த்து தன்னைப் பிடிக்கத்தான் காவல்துறை வந்துள்ளது நினைத்துக் கொண்டு ஓடினார். அவரை காவல்துறையினர் துரத்தி சென்ற காட்சிகளும் அரங்கேறியதாக தெரிவித்துள்ளார்.