அத்தனையையும் இழந்தாலும் அன்பை இழக்கவில்லை அவங்க!: கமல் கலங்கிய கண்களுடன் உருகியது யார் பற்றி?

By manimegalai aFirst Published Nov 24, 2018, 4:26 PM IST
Highlights

தமிழகத்தின் எல்லா அரசியலும் கஜா புயல் சுழற்றியடித்து சுருட்டியெடுத்த நாகை மாவட்டம் நோக்கித்தான் இருக்கிறது. தங்களை நோக்கி வரும் தலைவர்களிடம் ஆத்திரம், சோகம், துக்கம், வேதனை, கொதிப்பு, ஆதங்கம், இயலாமை  என்று உடைந்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள். 
 

தமிழகத்தின் எல்லா அரசியலும் கஜா புயல் சுழற்றியடித்து சுருட்டியெடுத்த நாகை மாவட்டம் நோக்கித்தான் இருக்கிறது. தங்களை நோக்கி வரும் தலைவர்களிடம் ஆத்திரம், சோகம், துக்கம், வேதனை, கொதிப்பு, ஆதங்கம், இயலாமை  என்று உடைந்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள். 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்களின் உணர்வுகளை வேறொரு கோணத்தில் பார்த்து உருகியிருக்கிறார். 


பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வந்த அவர்...”விளக்க முடியாத அவலங்கள் அங்கே காணக்கிடக்கின்றன. வாழ்நாள் முழுவதும் கட்டியமைத்த வாழ்க்கை ஒரே நாளில் தகர்ந்து விழுந்துள்ளதால் மக்கள் நிர்கதியாக நிற்கின்றனர். அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாம்கள் குறுகியதாக உள்ளன. அதனுள் நூறு பேர், நூற்றைம்பது பேர் என மக்கள் கூட்டம் மிக சிரமத்துக்கு நடுவில் பிழைத்துக் கிடக்கிறார்கள். 

இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலும், ‘நீங்கள் சவுக்கியமா?’ என்று கேட்கும் நல்ல உள்ளங்களை கண்டு நெகிழ்ந்து போனேன். வீடில்லை, சோறில்லை, அடுத்த நாள் கட்டிட உலந்திட துணியில்லை, அடுத்த நாள் பற்றிய நம்பிக்கையுமில்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி என் நலனை விசாரித்த அவர்களைப் பார்த்து கலங்கிப் போனேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் கூட அந்த மக்களிடம் அன்பு மட்டும் மிஞ்சியிருக்கிறது. 


சுள்ளிக்குச்சிகள் மாதிரி தென்னை மரங்கள் சரிந்து கிடக்கின்றன. ஒன்று மட்டும் உண்மை. புயலுக்கு முன் அரசாங்கம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் போதாது, புயலுக்கு பின் இப்போது எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகளும் போதாது.” என்றிருக்கிறார்.

click me!