கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 15ம் தேதி மாணவர் அமைப்பினர் பள்ளியை சேதப்படுத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. ஆனால், பெரிதாக எடுத்து கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததால் கலவரம் வெடித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 4 நாட்கள் அமைதியாக முறையில் நடைபெற்று வந்த போராட்டம் 5வது நாளான 17ம் தேதி திடீரென வன்முறை வெடித்தது.
இதையும் படிங்க;- கலவரத்தின் போது ஆட்டையை போட்ட பொருட்ளை எடுத்த இடத்தில் வச்சுருங்க.. தண்டோரா மூலம் போலீஸ் எச்சரிக்கை..!
அப்போது, பள்ளி மீது மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீக்கிரையாகின. பள்ளியில் இருந்த நாற்காலி, மேஜை, பெஞ்சுகள், ஏர் கூலர் உள்ளிட்ட பல பொருட்களை வன்முறையாளர்கள் தூக்கிச் சென்றனர். இதனையடுத்து, 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்திற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இதையும் படிங்க;- பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 13ம் தேதி தான் ஸ்ரீமதி உயிரிழந்தார். 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை தொடர்ந்து 10 முறைக்கு மேலாக மாவட்ட காவல்துறைக்கு மாநில உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர். குறிப்பாக 15ம் தேதி மாணவர் அமைப்பினர் பள்ளியை சேதப்படுத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
ஆனால், பெரிதாக எடுத்து கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அலர்ட் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மற்றும் உளவுத்துறை ஐ.ஜி. பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- உளவுத்துறை ஐ.ஜி. பணியிடமாற்றம்... புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம்!!