
‘நித்யானந்தா’ இந்த பெயரை நாம் எவரும் மறக்க முடியாத அளவுக்கு அவ்வப்போது பேசி வீடியோ வெளியிட்டு மீம் கன்டென்ட் ஆகி வருபவர் என்றே கூறலாம். கைலாசா தீவுக்கு வாருங்கள் என்று கூறி இளைஞர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார்.
சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய நித்யானந்தா மீண்டும் ஒரு பரபரப்பை மட்டுமல்ல, ஆச்சர்ய தகவல்களையும் கொடுத்துள்ளார். குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றினார் நித்யானந்தா.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?
4 ஆயிரம் வீடியோ செத்துட்டேனு சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளார்கள். எல்லா வீடியோவும் பார்க்க முடியல. எனக்கே சந்தேகமாக தான் இருக்கிறது உயிரோடு இருக்கேனான்னு. இப்போ யூட்யூப்ல, பேஸ்புக்ல தான் பஞ்சாயத்து நடக்குது. அப்பறம் ராமசாமி வரல கந்தசாமி வரலனு சொல்லக்கூடாது. நான் உயிரோடு இருக்கானா இல்லையானு ஒரு முடிவுக்கு வாங்க.
ஆனா நான் நல்லா தான் இருக்கேன்’ என்று தனக்கே உரிய பாணியில் ரகளையுடன் ஆரம்பித்தார். புகழ்கிறவர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம், புகழ்கிறவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் இருந்தாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். மகா கைலாசாவில் இருந்து பரமசிவன் நமக்கு நேரடியாக வழங்கும் சத்சங்க உரை. சமாதி பழகுங்கள். இந்த 4 மாதமும் நிர்வகல்ப சமாதி தியான முறையை பழகி மற்றவர்களுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்.
சமாதி பழகுகின்ற செய்முறை பற்றி பல சத்சங்கங்களை ஏற்கனவே அளித்திருக்கிறேன். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கைலாசாவின் அதிகாரப்பூர்வ இளணயதள பக்கத்தில் உள்ளது. சாதுர்மாசிய விரதத்தில் 1 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும். எனவே 1 கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்று விக்க வேண்டும். இந்து விரோத தீய சக்திகள் என்னை தாக்கி அழிக்க முயன்றபோது, நான் கைலாசாவை உருவாக்கிவிடவில்லை.
மேலும் செய்திகளுக்கு..20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !
ஆனால் அப்போது அதற்கான கனவு கண்டு கொண்டிருந்தேன். லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான். பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.
உலகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் 1,000 பேருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு கைலாசா சார்பில் வழங்கப்படும். இதற்கு எனது சீடர்கள் மட்டுமல்ல தனிப்பட்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்தால் போதும்.
தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் பண மதிப்பில் அவர்களுக்கு ரொக்கமாக ரூ.1 லட்சத்துடன் கைலாசாவின் அன்னலட்சுமி விருதும் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், கைலசாவுக்கு வந்தால் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் கூறி கலகலப்பை ஏற்படுத்தி உள்ளார் நித்தி.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !