கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் வாங்கி குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்த பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர், டிஜிபி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் வாங்கி குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதையும் படிங்க: ஓயாத மரண ஓலம்! பலி எண்ணிகை 60ஆக உயர்வு! தொடரும் கைது நடவடிக்கைகள்! கள்ளக்குறிச்சியை அலறவிடும் சிபிசிஐடி.!
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டதை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: மதுவுக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து போராடிய ஸ்டாலின் கள்ளக்குறிச்சி வராதது ஏன்? பிரேமலதா கேள்வி
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், முதல் தகவல் அறிக்கை, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இழப்பீடு, கள்ளச்சாராய விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.