புள்ளி விவரத்தை வெளியிட்டு ஆளுங்கட்சியின் வயிற்றில் புளியை கரைக்கும் தமிழக பாஜக.!

Published : Jun 25, 2024, 08:14 PM ISTUpdated : Jun 26, 2024, 02:11 PM IST
புள்ளி விவரத்தை வெளியிட்டு ஆளுங்கட்சியின் வயிற்றில் புளியை கரைக்கும் தமிழக பாஜக.!

சுருக்கம்

நோட்டாவுடன் போட்டியிட்ட கட்சி என்ற விமர்சினங்களுக்கு உள்ளான பாஜக இந்த முறை எவ்வளவு சதவிதம் வாக்கு வங்கியை வாங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மிக முக்கியமான இடத்தைப் பிடித்த நிலையில், தற்போது வர உள்ள சட்டமன்ற தேர்தலில் எவ்வளவு சதவீத வாக்குகளை பெறும் என அக்கட்சியின் தகவல் மேலாண்மை குழு தலைவர் மகேஷ் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில் இந்த முறை மக்களவைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது. ஆளும் திமுக அரசு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக தேமுதிக உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி மற்றும் பல சிறிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

இந்நிலையில் கடந்த முறை 24 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இம்முறை 22 இடங்களில் மட்டுமே களம் கண்டது. திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அதன் வாக்கு சதவிகிதம் 33.52இல் இருந்து 26.93 ஆக குறைந்துள்ளது. நோட்டாவுடன் போட்டியிட்ட கட்சி என்ற விமர்சினங்களுக்கு உள்ளான பாஜக இந்த முறை எவ்வளவு சதவிதம் வாக்கு வங்கியை வாங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. 

இச்சூழலில் புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து 25 இடங்களில் பாஜக போட்டியிட்டது. அதில் 10 இடங்களில் 2வது இடமும், 14 தொகுதிகளில் 3வது இடமும் பிடித்துள்ளது. ஆனால், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி ஆரம்ப முதலே முன்னிலையில் இருந்து வந்தார் பின்னர் திமுக மணிக்கும், சௌமியாக்கும் கடும் போட்டிகளுக்கு இடையே குறைவான வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி வெற்றியை நழுவவிட்டார். ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 18.24 சதவிகித வாக்குகளையும், பாஜக மட்டும் 11.24 சதவிகிதம் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிகம்.

 

இந்நிலையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில  செயலாளர் பிரதீப், நடந்து முடிந்த தேர்தலில் சட்டமன்ற ரீதியாக எவ்வளவு வாக்குகளை பாஜக பெற்றுள்ளது என்ற தகவலை புள்ளி விவரத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டின் 28 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 40 சதவீத வாக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் 79 லட்சத்து 44 ஆயிரத்து 680 வாக்குகளை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 78 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்ததாகவும் பாஜகவின் தகவல் மேலாண்மை குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது வர உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!