Shocking Incident: ஓசியில் ஸ்வீட் கேட்டு தகராறு; போதையில் கடையை சூறையாடிய ஆசாமி - திருப்பத்தூரில் பரபரப்பு

Published : Jun 25, 2024, 05:22 PM IST
Shocking Incident: ஓசியில் ஸ்வீட் கேட்டு தகராறு; போதையில் கடையை சூறையாடிய ஆசாமி - திருப்பத்தூரில் பரபரப்பு

சுருக்கம்

ஜோலார்பேட்டையில் பேக்கரி கடையில் ஓசியில் ஸ்வீட் கேட்டு கடையின் கண்ணாடிகளை சுத்தியால்  உடைத்த  நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்  ஜெயக்குமார் (வயது 37). இவர் வக்கணம்பட்டி பகுதியில் நியூ ஐஸ்வர்யா பேக்கரி என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பேக்கரிக்கு ஹெல்மட் அணிந்து வந்த  நபர் ஒருவர் ஜெயகுமாரிடம்  ஓசியில் ஸ்வீட் தர வேண்டும் என கேட்டுள்ளார். 

திமுகவின் கோரமுகம் அம்பலமாகிவிட்டது; திமுகவை வன்னியர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது - ராமதாஸ் ஆவேசம் 

ஆனால் ஜெயக்குமார் ஸ்வீட் தர மறுத்ததால் கோபித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் மீண்டும் வந்த அந்த நபர் ஆத்திரத்தில் தான் கையில் வைத்திருந்த சுத்தியால் கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்த அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த நபரை ஜெயக்குமார், அவருடைய உறவினர்கள் பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூரன் 

இதுகுறித்து  ஜோலார்பேட்டை காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து அந்நபரிடம்  விசாரணை மேற்கொண்டதில் அவர், ஜோலார்பேட்டை,குப்புசாமி தெரு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(47) என்பதும், குடிபோதையில் இலவசமாக  ஸ்வீட் கேட்டதில், கடைகாரர் ஸ்வீட் தரமறுத்துவிட்டதால், ஆத்திரத்தில் சுத்தியால் பேக்கரியில் இருந்த கண்ணாடிகளை உடைத்தாக, பிரகாஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஓசியில் ஸ்வீட் கேட்டு பேக்கரி கடையை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!