வாலாஜா பேட்டை அருகே 4 சிறுமிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நான்கு சிறுமிகளையும் வேலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அனந்தலை அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் குடுகுடுப்பு சமூகத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத நான்கு சிறுமிகளுக்கு அதே பகுதியில் இன்று (17.06.2024 திங்கட்கிழமை) திருமணம் நடைபெற உள்ளதாக சமூக குழந்தை பாதுகாப்பு நல துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பக்ரித் பண்டிகை: மதுரையின் மதுரையின் பெரும்பாலான திடல்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய் துறையினர் மற்றும் சமூக குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகள் நான்கு சிறுமிகளின் பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கி குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமென தெரிவித்தனர். மேலும் இன்று நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நான்கு சிறுமிகளை வேலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தினால் இது போன்ற திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதன் மீது அரசு கவனத்தில் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.