வேலூர் மாவட்டத்தில் 1 டன் அளவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அண்டை மாநிலங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்டாலும், அவை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் எலிதாக கிடைக்கும் குட்கா, பான் மசாலாவுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதன் புழக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
60 நாட்கள் தடைக்காலம் நிறைவு; கூண்டில் இருந்து விடுபட்ட பறவையாக கடலுக்குள் சீறிப்பாய்ந்த படகுகுள்
இந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் குட்கா பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் நேற்று காலையில் இருந்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்
இந்நிலையில், ஓசூரில் இருந்து சொகுசு காரில் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஒரு டன் குட்கா பொருள்கள் கடத்தி வரப்பட்டபோது கையும், களவுமாக பிடிக்கப்பட்டது. இதனை கொண்டு வந்த சுனில் பட்டேல், சுமீர் நாத், குமார் ஆகிய மூவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசு கார், ஈரோடு பதிவன் கொண்ட இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.