சாரை பாம்பை தோல் உரித்து சமைத்து சாப்பிட்ட திருப்பத்தூர் பியர்கிரில்ஸ்; வனத்துறை அதிகாரிகள் சிறப்பு கவனிப்பு

By Velmurugan s  |  First Published Jun 12, 2024, 11:05 AM IST

திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து சமைத்து சாப்பிட்ட நபரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (வயது 30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன்  தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள்  இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜ்குமாரை கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் சாலையில் போலீஸ் வாகனத்தை பந்தாடிய காட்டி யானைகள்; எஸ்ஐ காயம்

Latest Videos

மேலும் விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதும் தெரிய வந்தது. இந்திய வனச்சட்டத்தின் அடிப்படையில் பாம்பை துன்புறுத்துவதும், அதனை அடித்து கொல்வதும் சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில் ராஜேஷ்குமாரை கைது செய்த அதிகாரிகள் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கலில் பேக்கரிக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து; ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் - அதிகாரிகள் அதிரடி

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் ஊருக்குள் நுழைந்த தண்ணீர் பாம்பை கொன்றுவிட்டு பின்னர் அதனை கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பது போல் பேசி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

click me!