Crime: திருப்பத்தூரில் 4 மாத கர்ப்பிணிக்கு உடலின் பல பகுதிகளில் கத்திகுத்து; போதையில் கணவன் வெறியாட்டம்

Published : Jun 10, 2024, 10:27 PM IST
Crime: திருப்பத்தூரில் 4 மாத கர்ப்பிணிக்கு உடலின் பல பகுதிகளில் கத்திகுத்து; போதையில் கணவன் வெறியாட்டம்

சுருக்கம்

வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவன் 4 மாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நிலையில் இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் வீரராகவவலசை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். ஓட்டுனரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சுபாஷினி 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

உடல் முழுவதும் அடுக்கடுக்கான நோய்கள்; கைவிரித்த தனியார் மருத்துவமனை - சாதித்து காட்டிய அரசு மருத்துவர்கள்

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சுபாஷினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இருவீட்டார் பெற்றோரும் காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்த ஒரு மணி நேரத்திலேயே மது போதையில் வீட்டிற்கு வந்த கணவன் விஜயகுமார் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷினியின் வயிறு, கழுத்து, கை என நான்கு இடங்களில்  குத்தியதில் படுகாயமடைந்து நிலைகுலைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதாவின் பேச்சு சிறுபிள்ளை தனமாக உள்ளது - மாணிக்கம் தாகூர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, மது போதையில் இருந்த கணவன் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!