சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா, சென்னையின் பிரபல தொழிலதிபருக்கு ரூ. 42.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நகர நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ் ரமேஷ், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள விஎஸ்டி அண்ட் சன்ஸ் (VST & Sons) ஷோரூமில் XF 3.0 L என்ற பிரீமியம் சொகுசு டீசல் காரை ரூ.61 லட்சத்துக்கு வாங்கினார். கடந்த மார்ச் 2018 இல், அவர் தனிப்பட்ட பயணமாக பெங்களூரு சென்று கொண்டிருந்த போது, நடு ரோட்டில் பலத்த சத்தத்துடன் கார் என்ஜின் பழுதானது. அந்த கார் 22,400 கிலோமீட்டர் மட்டுமே சென்றிருந்தாலும், அது உத்தரவாதக் காலத்திற்குள் இருந்தபோதிலும் என்ஜின் செயலிழந்தது.
மிகவும் சிரமப்பட்டு, கார் பெங்களூருவில் உள்ள ஒரு ஷோரூமுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் மூன்று வருட. உத்தரவாத காலத்திற்குள் நடந்ததால், சேவை மையம் இலவசமாக என்ஜினை மாற்றியது. அடுத்த ஆண்டில், மீண்டும் அதே போல நடு ரோட்டில் என்ஜின் பழுதானது. ஆனால் இந்த முறை VST & சன்ஸ் ஷோரும், உத்தரவாத காலம் முடிந்துவிட்டதால் என்ஜினை இலவசமாக மாற்ற முடியாது என்று மறுத்து விட்டது. மேலும், ஓராண்டுக்கும் மேலாக, கார் சர்வீஸ் சென்டரில் கிடப்பில் இருந்தது..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனவே, 'இயல்பிலேயே குறைபாடுள்ள' மற்றும் 'பழுமையான' காரை விற்பனை செய்ததாக, போத்தீஸ் நிர்வாக இயக்குனர், விஎஸ்டி நிறுவனம் மீது சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதற்கு பதிலளித்த VST நிறுவனம், கார் அதிகப்படியான பயன்பாட்டிற்கு உட்பட்டது என்றும்,, வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தது. மேலும் முறையற்ற பராமரிப்பு காரணமாக என்ஜின் தேய்மானம் அடைந்து பழுதுக்கு வழிவகுத்தது என்றும், கோவிட்-19 லாக்டவுன் காரணமாக காரைத் திருப்பி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறியது.
இதே போல் மும்பையை தளமாகக் கொண்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா, தாங்கள் 'இயல்பிலேயே குறைபாடுள்ள' காரைத் தயாரித்ததாகக் கூறுவதற்கு, போதிய ஆதாரம் காட்டவில்லை என்று வாதிட்டது. மேலும் விஎஸ்டி ஷோரூம் இன்வாய்ஸ் மதிப்பில் 50% (தோராயமாக ரூ.42.2 லட்சம்) என்ஜினை மாற்ற முன்வந்தாலும், அதை மறுத்து புதிய காரை கோருவது அநியாயமானது என்று வாதிட்டது. எனினும் அவர்களின் வாதங்களை நிராகரித்த கமிஷன், போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷுக்கு ரூ.42 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் அல்லது ரூ.55,000 இழப்பீட்டுன புதிய என்ஜினை மாற்றி தர வேண்டும் என்று உத்தரவிட்டது.