வங்க கடலில் நாளை உருவாகிறது புயல்.! எந்த பகுதியில் கரையை கடக்கிறது.? புயலுக்கு என்ன பெயர் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Nov 16, 2023, 12:26 PM IST

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற இருப்பதாகவும், இற்கு மிதிலி என பெயரிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு இருக்காது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையானது கொட்டித்தீர்த்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று  ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 

Latest Videos

undefined

நாளை உருவாகிறது புயல்

இன்று காலை 5.30மணி நிலவரப்பரடி வடக்கு வட மேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இது தற்போது மேலும் வலுவடைந்து புயலாக நாளை மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவின் பரிந்துரையின் படி 'மிதிலி' என பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்த புயலானது வருகிற  18 ஆம் தேதி வங்கதேசத்தின் மொங்கலோ- கோபுரா பகுதியில் ஆழ்ந்த காழ்ற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  இருந்த போதும் வளி மண்டல் சுழற்ச்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் கடல் அலை; புதுவையில் கடலில் குளிக்க மக்களுக்கு தடை
 

click me!