வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் கடல் அலை; புதுவையில் கடலில் குளிக்க மக்களுக்கு தடை

By Velmurugan s  |  First Published Nov 16, 2023, 11:52 AM IST

புதுச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால் கடலில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் தொடர்ந்து இரண்டு தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு தினங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து இருப்பதால் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.

Latest Videos

மேலும் புதுச்சேரியில் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது கடலும் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கத்திற்க்கு மாறாக உயரமான அலைகள் எழுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்க புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேதி வெளியீடு..! ரிசல்ட் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு

மேலும் பொது மக்கள் கடலில் குளிப்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அவர்களின் படகுகள் தேங்காய் திட்டு பழைய துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

click me!