புதுச்சேரியில் முதல்வர், ஆளுநர் பங்கேற்ற அரசு விழாவில் பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் தின விழா கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பழங்குடியின மக்களின் பொருட்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா நடைபெற்ற கம்பன் கலை அரங்கில் சுமார் 300 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு நாற்காலிகள் இருந்தது. மேலும் கூடுதலாக நாற்காலிகள் போட்டு பழங்குடியின மக்கள் அமர வைக்கப்பட்டனர். ஒரு சில பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்ததனர். இதனால் விழாவில் பெரும் பரபரப்பு நிலவியது.
காவிரியை மையப்படுத்திய தேர் திருவிழா; மயிலாடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இது பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் வல்லவன் பழங்குடியின மக்களை எழுந்து நாற்காலியில் அமருமாறு கூறினார். அதை ஏற்க மறுத்து அவர்கள் இது போன்ற நாற்காலியை எங்கள் மக்கள் பார்த்ததே கிடையாது. எங்களை ஏன் தரையில் அமர வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் கடந்த 15 ஆண்டு காலமாக எங்களது கோரிக்கை தீர்க்கப்படவில்லை, விழா மேடையில் ஒரு பழங்குடியின மக்களை கூட ஏன் அமர வைக்கவில்லை இப்போது ஏன் எங்களை அழைக்கிறீர்கள் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனை அடுத்து விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் மற்றும் முதல்வர் மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் துறை இயக்குனர் சாய் இளங்கோவனை அழைத்து விளக்கம் கேட்டு எதற்காக அவர்களை தரையில் அமர வைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். இதனை அடுத்து அவர்களுக்கு மீண்டும் நாற்காலிகள் வழங்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். இதனால் விழாவில் பெரும் பரபரப்பு நிலவியது.