50 ஆண்டுகால பழமையான கோவிலை இடித்த அதிகாரிகள்; அதிகாரிகளுக்கு சாபம் விட்டு கதறிய பெண்கள்

By Velmurugan s  |  First Published Nov 15, 2023, 7:56 PM IST

புதுவையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோவிலை இடித்த அதிகாரிகளுக்கு எதிரா அழுது புரண்ட பெண்கள், நெடுஞ்சாலைத் துறையினருக்கு எதிராக சாபம் விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு உள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சாலை புதுச்சேரி வழியாக செல்வதால் புதுச்சேரியிலும் ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த அரியூரில் 50 ஆண்டுகால பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருப்பதால் கோவிலை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே நெடுஞ்சாலைகள் அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் பொதுமக்கள் அதை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தினர். 

Latest Videos

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக காந்தி மண்டபத்தில் இருந்து பெரியாரின் பேரன்கள் - அமைச்சர் உதயநிதி பைக் ரைட்

இந்நிலையில் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் கோவிலில் இருந்த அம்மன் சிலை உள்ளிட்ட பூஜா பொருட்களை எடுக்க முடியாத அளவிற்கு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர்.

தலைக்கேறிய மது போதையில் பெற்ற தாய், முதியவர் வெட்டி படுகொலை; மகள் படுகாயம்

இதனை அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியூர் மக்கள் அங்காளம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு வந்த நிலையில் திடீரென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த கோவிலை இடித்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி துடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பெண்கள் அதிகாரிகளுக்கு எதிராக சாபம் விடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

click me!