உலகத்திலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எது.? அதிமுக, திமுகவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?- வெளியான தகவல்

By Ajmal Khan  |  First Published Jun 26, 2023, 10:48 AM IST

உலகத்திலேயே அதிக உறுப்பினர்கள் மற்றும் உலகத்தில் அதிக பிரபலமானவர்களின் பட்டியலை World updates நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி முதல் இடத்தையும், அதை போல பிரதமர் மோடி பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். 


உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி எது.?

உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி எது என்பதை தொண்டர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து World updates நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், உலகத்திலேயே பாரதிய ஜனதா கட்சி அதிகளவு தொண்டர்களை கொண்ட கட்சி என தெரிவித்துள்ளது. இரண்டாவதாக சைனீஸ் கம்யூனிஸ்ட் கட்சியும், 3 வது இடத்தை டெமோகிரெடிக் பார்ட்டியும், 4 வது இடத்தை இந்திய தேசிய காங்கிரஸ் , 5வது இடத்தை குடியரசு கட்சியும் பிடித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் 7 வது இடத்தை அதிமுகவும், 9வது இடத்தை ஆம் ஆத்மியும், 14வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சியும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக முதல் 15 இடங்களை பிடிக்கவில்லை. எந்த இடத்தை பிடித்துள்ளது என்ற பட்டியலும் வெளியிடப்படவில்லை. 

World’s most popular leaders (approval rating):

🇮🇳 Narendra Modi: 76%
🇨🇭 Alain Berset: 60%
🇲🇽 Andrés López: 59%
🇦🇺 Anthony Albanese: 54%
🇮🇹 Giorgia Meloni: 52%
🇧🇷 Lula da Silva: 51%
🇪🇸 Pedro Sánchez: 40%
🇺🇸 Joe Biden: 40%
🇨🇦 Justin Trudeau: 40%
🇧🇪 Alexander De Croo: 39%…

— World of Statistics (@stats_feed)

 

உலகத்தின் பிரபல தலைவர்கள் யார்.?

இதே போல உலகத்திலேயே பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 76சதவிகிதத்தோடு முதல் இடத்தை பிடித்துள்ளார். 2வது இடத்தை Alain Berset, 7வது இடத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிடித்துள்ளனர். இதில் 22 நாடுகள் பட்டியலில் ராகுல் காந்திக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தநிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, "உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்" பட்டியலில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் " ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, "உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்" பட்டியலில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் " ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

புரட்சித் தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு,… https://t.co/wV1y0HP6l9

— SP Velumani (@SPVelumanicbe)

 

எஃகு கோட்டையாக அதிமுக

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு,  புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்டு, மாபெரும் எஃகு கோட்டையாக உருவாக்கப்பட்ட அனைத்திந்தியஅண்ணா திராவிடமுன்னேற்ற கழகம், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வீறுநடை போட்டு வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது. கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, மக்கள் நலன் சார்ந்து மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் அஇஅதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி! என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

குழந்தை திருமணம் செய்தேன் என கூறிய ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்
 

click me!