
சென்னையில் 100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறு சிறு பெட்டிக்கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்க் என பல இடங்களில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் வேகமாக பரவி வருகின்றன. 2000 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் தான் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்த நிலையில் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது கவனமுடன் இருக்குமாறு பொதுமக்களை சென்னை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் என்று சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த சூழலில் 500 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களின் நாணய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இதனிடையே நடப்பாண்டில் மட்டும் 500 ரூபாய் கள்ள நொட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டும் போது, 20 ரூபாய் கள்ளநோட்டு 8.4%, 500 ரூபாய் நோட்டு 14.4% அதிகரித்துள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி மற்றும் அதன் 19 கிளை அலுவலகங்களில் இருந்தும் ரூ.3.98 கோடி மதிப்பிலான 79,669 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற வங்கி அலுவலகங்களில் ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 100 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சென்னை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் தான் கள்ள நோட்டு அதிகமாக இருக்கும் என்று எண்ணி, பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டுகளை அதிகம் கவனிப்பதில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே 100 ரூபாய் நோட்டு வாங்கும் போது கவனத்துடன் பார்த்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களை கவனித்தால் கள்ள நோட்டுகளை எளிதில் அடையாளம் காணலாம்.
கள்ள ரூபாய் நோட்டை எப்படி கண்டறிவது?
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் அதிரடி கைது.. என்ன காரணம்?