இந்தியா அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50% பெண்கள் தமிழ்நாட்டில் பணி புரிகின்றனர் என தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவையை மாநில தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் அரசு சிமெண்ட் ஆலையின் செயல்பாடு உற்பத்தி திறன் விற்பனை சுண்ணாம்புக்கல் சுரங்கங்களின் எண்ணிக்கை சுண்ணாம்பு கற்களின் தரம் சுரங்கத்திற்காக வாங்கப்பட்டுள்ள நிலங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டாலைகள் பயன்படுத்தி தற்போது காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி பசுமை காடுகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும். சுரங்கம் உள்ள பகுதிகளில் எந்தெந்த வகையான மரங்கள் வளரும் என்பதை அறிந்து அவ்வகையான மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அரசு சிமெண்டாலைக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்பத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
அரசு சிமெண்டாலை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் அந்தந்த பகுதியில் உள்ள படித்த தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வேலை வாய்ப்புக்கு ஏற்ப தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கக்கூடிய உற்பத்தி தொழிற்சாலைகள் அமைய உள்ளது. இப்பகுதியில் தைவான் நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன. அதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
undefined
குழந்தை திருமணம் செய்தேன் என கூறிய ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்
பள்ளி கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் சிமெண்ட் ஆலை வளாகத்தை பார்வையிடவும் அது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வருகையை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். போதுமான உரிய பாதுகாப்புடன் பள்ளி கல்லூரி மாணவர்கள் சிமெண்ட் ஆலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தொழில் துறையில் 13-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது முதலாவது இடத்தில் உள்ளது. தொழில் தொடங்குவதற்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது இந்தியா அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் 50% பெண்கள் தமிழ்நாட்டில் பணி புரிகின்றனர் என கூறினார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்னா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்