முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் பிரிவு சார்பில் 2023ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
undefined
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட அளவில் 2150 பள்ளி மாணவர்களும், 1169 மாணவிகளும், கல்லூரி பிரிவில் 1541 மாணவர்களும், 986 மாணவிகளும், அரசு ஊழியர்கள் பிரிவில் 534 ஆண்களும், 267 பெண்களும், பொதுப்பிரிவில் 842 ஆண்களும், 465 பெண்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 125 ஆண்களும், 79 பெண்களும் என மொத்தம் 8158 நபர்கள் கலந்து கொண்டனர்.
உலக பிரசித்தி பெற்ற உத்திரகோச மங்கை ஆலய குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம்
மேலும், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா 3000, இரண்டாம் பரிசு தலா 2000, மூன்றாம் பரிசு தலா 1000 பரிசுத்தொகை என ஆக மொத்தம் 41.58 இலட்சமும் இவ்விழாவில் வழங்கினார். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தின் சார்பாக ஐந்து பிரிவுகளில் 362 விளையாட்டு வீரர்களும், 350 விளையாட்டு வீராங்கனைகளும் அரசு செலவில் பங்கேற்க உள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; பாபநாசம் பட பாணியில் உடலை புதைத்த கொடூரம்
இப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு உரிய முறையில் நிறைவேற்றித்தரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.