தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற அரியலூர் மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியர் விமானத்தில் அழைத்துச் சென்று ஊக்கப்படுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் மத்திய அரசு சார்பில் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதினர்.
இந்த மையத்தில் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் 8 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வு எழுதும் 8 மாணவ, மாணவிகளுக்கும் அப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளை விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறி ஊக்கப்படுத்தியிருந்தார்.
மேலும் இந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த திறனறித் தேர்விற்காக ஆசிரியர்களை கொண்டு ஊக்கப்படுத்தி வந்தனர். இந்நிலையில் வானவ நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியான மிருணாளினி என்ற மாணவி தேர்ச்சி பெற்றிருந்தார்.
தலைமை ஆசிரியர் கூறியபடி இந்த மாணவியை திருச்சி விமான நிலையம் அழைத்துச் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு பயணம் செய்ய வைத்தார். இதனால் மாணவி மிகுந்த உற்சாகம் கொண்டார். இந்த செய்கை மற்ற மாணவமாணவிகளையும் உற்சாகப்படுத்தியது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் மோடிக்கு கோவை சிறுவன் கோரிக்கை!