அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கட்டிலில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த துக்கம் தாங்காத தந்தை தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 26). அரியலூரில் உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் திவ்யா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கோவையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்
குழந்தை இறந்த துக்கத்தில் தினேஷ் தனது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தினேஷின் தாய் மாமா பக்கத்து ஊரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தினேஷை தங்க வைத்தார். அப்போது விரக்தியில் இருந்த தினேஷ் தனது உடலில் தாமிர கம்பியை சுற்றிக் கொண்டு அருகில் இருந்த பிளக் போர்டில் கைது வைத்துள்ளார்.
ஷேர் ஆட்டோ பணிகளின் கவனத்திற்கு; மதுரையில் பெண் பயணியிடம் நகை பறிப்பு - ஓட்டுநர் கைது
அப்போது மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் உயிரிழந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.