பழனியில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதி எண் 1440 வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரம் என்பது 1440 நிமிடங்கள் விடிய விடிய மக்களை குடிக்க வைத்த அமைச்சருக்கு கைதி எண் 1440 வழங்கபட்டுள்ளது தான் கர்மா என விளக்கமளித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் தேரடி வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன், பாஜக மாநில செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மீனாதேவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைவரும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய இராம.ஸ்ரீநிவாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதி எண் 1440 குறித்து ஒரு விளக்கம் கொடுத்தார். அதாவது, 24 மணி நேரத்திற்கு 1440 நிமிடங்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களை 1440 நிமிடங்கள் விடிய விடிய குடிக்க வைத்த அமைச்சருக்கு கைதி எண் 1440 வழங்கப்பட்டுள்ள தான் கர்மா என்றும் விளக்கினார். தற்போது மருத்துவமனையில் இருந்தாலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவர் ஒரு மண் குதிரை... அதிமுக என்ற ரயிலில் தேவையில்லாத பெட்டிகளை கழற்றி விட்டுவிட்டோம்- சீறும் ஜெயக்குமார்
இந்த பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட, ஒன்றிய, நகர பாஜக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.