1 நிமிடத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வீரத்தமிழன்..."திக் திக் நிமிட காணொளி"...! சபாஷ் தினேஷ் கார்த்திக்..!

Mar 19, 2018, 6:01 PM IST



1 நிமிடத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வீரத்தமிழன்...திக் திக் நிமிட காணொளி...சபாஷ் தினேஷ் கார்த்திக்..!

ஒரே ஒரு நிமிடத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வீரத்தமிழனாய் உருவெடுத்துள்ளார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்

இந்தியா,இலங்கை,பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின. 20 ஓவர்களில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்த நிலையில்,இந்திய அணி வெற்றிக்கு கடைசி நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தினேஷ் கார்த்தியை இந்தியாவே போற்றினாலும், தமிழர் என்ற முறையில் "வீரத்தமிழன்  தினேஷ்  கார்த்திக்  என போற்றி புகழ்ந்து வருகின்றனர்  ரசிகர்கள்...

எத்தனையோ போட்டிகள் இருந்தாலும்,இந்தியா  பாகிஸ்தான் விளையாடும் போது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அல்லவா.. அதனையும் மீறிய  திக் திக் நிமிடங்களாக மாறிய  நேற்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கடைசி பாலில் தினேஷ் கார்த்தி அடித்த சிக்ஸர் தான்  இப்போது வரை  அனைவரின்  மனதில் நின்ற ஹைலைட்.....

பாம்பு டான்ஸ்

8 பந்துகளில் 29 ரன்களை குவித்து டி20 தொடரை வென்று பாம்பு டான்ஸ் போட நினைத்த பங்களாதேஷ் அணி ரசிகர்களை கதற விட்டார்ந தினேஷ்

டி20 கிரிக்கெட்டில் பங்களாதேஷ் வெற்றி பெற்று பாம்பு டான்ஸ் ஆடும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிரடி திருப்பமாக தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வெற்றியை இந்திய அணிக்கு பறித்துக் கொடுத்தார்.

வெற்றிக்கு வரமாக வந்தார் தினேஷ் கார்த்திக்

ரூபெல் ஓவரில் இரண்டு சிக்சர், 2 பவுண்டரி விளாசி, இந்திய ரசிகர்களை மகிழ்வித்தார். பந்துகளை வீணடித்த விஜய் ஷங்கர் 17 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில், தினேஷ் சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

கடையில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் (29), வாஷிங்டன் சுந்தர் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், இந்திய அணி கோப்பையை தட்டிச்சென்றது.

இந்த வெற்றியை ஓவ்வொரு இந்தியனும் கொண்டாடும் வகையில்  சமூக வலைத்தளங்களில்  தினேஷை  புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்...

தமிழ் ரசிகர்கள்... ஒரு படி மேலே சென்று.... வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கி  உள்ளனர்.