நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை; அனைவருக்கும் பொதுவானவன் - உயநிதி ஸ்டாலின்

By Velmurugan s  |  First Published Jan 4, 2023, 8:20 AM IST

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு  நிறைவு விழாவில் கலந்து கொண்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை, அனைவருக்கும் பொதுவானவனாக இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வில்லிவாக்கம் பகுதியில் நேற்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நான் அண்மையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது வைரலாகியுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையால் செவிலியர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..! திமுக அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் தீர்மானம்

Tap to resize

Latest Videos

உதயநிதி எப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறலாம் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நான் உங்களுக்கு தற்போது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் தை திருநாள் நல்வாழ்த்துகள், ஏன் ரம்ஜான் வாழ்த்து கூட கூறுவேன். நான் எல்லோருக்கும் பொதுவானவன், எப்போதும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக என்றும் இருக்கக் கடமைப் பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..! திமுக நிர்வாகிகள் நள்ளிரவில் கைது.! கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது போன்று இந்து பண்டிகைகளுக்கு வாழத்து கூறுவது இல்லை என்று பாஜகவினர் குற்றம் சாட்டும் நிலையில், உதய நிதி தற்போது இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

click me!