லிங்காயத் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார்... அவருக்கு வயது 81!!

By Narendran SFirst Published Jan 4, 2023, 12:24 AM IST
Highlights

கர்நாடகா லிங்காயத் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

கர்நாடகா லிங்காயத் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கர்நாடகாவில் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிப்பாட்டு முறையை பின்பற்றும் ஒரு பிரிவினர் தங்களை லிங்காயத்துகள் என்றும் வீர சைவர்கள் என்றும் அழைத்து கொள்வர். கர்நாடகாவில் இருக்கும் 500 மடங்களில் பெரும்பாலான மடங்கள் லிங்காயத்து மடங்கள் தான் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  இந்திய அணுசக்தி கழகத்தில் 89 காலியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க !

லிங்காயத் மடாதிபதியாக 81 வயதான சித்தேஸ்வர் சுவாமி என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக ஸ்ரீ யோகாசிரமா ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரியில் அண்ணாமலை என்ன? பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் வெல்ல முடியாது... சவால் விடுக்கும் திமுக எம்.பி.!!

இதனிடையே மறைந்த சித்தேஸ்வர் சுவாமிகளின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதனிடையே சித்தேஸ்வர் சுவாமிஜியின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என துணை ஆணையர் விஜய் மஹந்தேஷ் தெரிவித்துள்ளார். 

click me!