பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அறிவித்தது தமிழக போக்குவரத்துத்துறை!!

By Narendran SFirst Published Jan 3, 2023, 10:19 PM IST
Highlights

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்களில் அதற்கான முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த நிலையில், அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் ஜன.12 ஆம் தேதி கூடுதலாக 2 ஆயிரத்து 751 பேருந்துகளும், 13 ஆம் தேதி கூடுதலாக 3 ஆயிரத்து 955 பேருந்துகளும், 14 ஆம் தேதி 4 ஆயிரத்து 043 பேருந்துகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோய்.. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

பிற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 183 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர ஜனவரி 16 ஆம் தேதி 4 ஆயிரத்து 334 பேருந்துகளும், 17 ஆம் தேதி 4 ஆயிரத்து 961 பேருந்துகளும், 18 ஆம் தேதி 6 ஆயிரத்து 300 பேருந்துகள் என மொத்தம் 15 ஆயிரத்து 595 இயக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னையில் 12 இடங்களில் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

அதன்படி, கோயம்பேட்டில் 10 மையங்கள், தாம்பரம் சானடோரியம் மற்றும் பூந்தமல்லியில் தலா ஒன்று என மொத்தம் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்வோர் https://www.tnstc.in இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதனிடையே சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!