போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

By Narendran SFirst Published Jan 3, 2023, 9:53 PM IST
Highlights

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்தும் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.

இதையும் படிங்க: 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்… நாளை வெளியிடப்படுவதாக தகவல்!!

தமிழ்நாடு அரசால் போதைப் பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இரு வார கால ஆப்பரேஷனாக நடத்தப்பட்டது. மேலும், மார்ச் 2022 இல் ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0 டிசம்பர் மாதம் ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டது. இந்த அதிரடி சோதனைகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம், குட்கா விற்பனை தொடர்பாக 48 ஆயிரத்து 838 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50 ஆயிரத்து 875 நபர்கள் கைது செய்யப்பட்டு, 11 லட்சத்து 59 ஆயிரத்து 906 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோய்.. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக 12 ஆயிரத்து 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 ஆயிரத்து 250 நபர்கள் கைது செய்யப்பட்டு, 26 ஆயிரத்து 525 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

click me!