12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்… நாளை வெளியிடப்படுவதாக தகவல்!!

Published : Jan 03, 2023, 08:34 PM IST
12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்…  நாளை வெளியிடப்படுவதாக தகவல்!!

சுருக்கம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும், 10 ஆஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

இதை அடுத்து நடப்பாண்டுக்கான, 12 ஆம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது. இதனிடையே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆதார் வேறு.. மக்கள் ஐ.டி வேறு.! மக்கள் ஐ.டி பற்றி விளக்கமளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 12ம் வகுப்பு பொது தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர். பள்ளிகள் பதிவிறக்கம் செய்த பின் மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?