ஆதார் வேறு.. மக்கள் ஐ.டி வேறு.! மக்கள் ஐ.டி பற்றி விளக்கமளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

By Raghupati RFirst Published Jan 3, 2023, 6:24 PM IST
Highlights

ஆன்லைன் ரம்மி பலருடைய உயிரைக் குடித்திருக்கிறது.அது வேண்டாமென்பது தான் எங்களின் எண்ணம் - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

சென்னை நந்தனத்தில், எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்களில் நில ஒதுக்கீடு ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ். இந்நிகழ்வில் Fishin India pvt.Ltd, Ranger Technologies Pvt.Ltd., International Aerospace Manufacturing Pvt.Ltd, DILOGY solutions LLP, Cloud Vantage Solutions Pvt.Ltd, Dew infosystem Pvt.Ltd உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் மனோ தங்கராஜ். அப்போது, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளை மேம்படுத்த தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் திருநெல்வேலி மற்றும் ஓசூரில் எட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளோம்.

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

எல்காட் மதுரை மாவட்டம் வடபழஞ்சி மற்றும் கின்னிமங்கலம் கிராமங்களில் 245.17 ஏக்கர் பரப்பளவில் ஒரு எல்கோசனை நிறுவியுள்ளது. எல்காட் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 200.04 ஏக்கர் பரப்பளவில் ஒரு எல்கோசெஸ்சை நிறுவியுள்ளது.  ஏற்காடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் விஸ்வநாதபுரம் கிராமத்தில் 124.04 ஏக்கர் பரப்பளவில் நிறுவியுள்ளது.

தமிழக முதல்வர் முதல்வர் பொறுப்பை ஏற்று 2030ல் எட்ட வேண்டிய 1 ட்ரில்லியன்  டாலர் மதிப்பிலான பொருளாதார  இலக்கை அடைய வேண்டுமென்ற நோக்கில் உழைத்து கொண்டிருக்கிறோம். ஐ.டி தளங்களும் தொழில்நுட்ப சேவைகள் அமைப்பும் 18சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. திருநெல்வேலி, ஓசூர்,கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறுவனங்களை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்

ஐ.சி.டி அக்காடமி மூலமாக திறன்மேம்பாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளது. ஐ.டி நண்பன் என்னும் அமைப்பில் அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கான தொழிற்நுட்ப செய்திகளைப் பகிர்ந்து வருகிறோம். அந்த அமைப்பில் முதல்நிலையில் தொழில் தொடங்க முனைவோரை இணைய‌ அழைக்கின்றோம். அரசைப் பொறுத்தவரையில் ஐ.டி துறை எப்போதும் முதல் நிலை தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக காத்திருக்கிறது.

தரவுகளின் அடிப்படையிலான அரசாக இருப்பது காலத்தின் கட்டாயம்,அதற்கான பணிகளின் தொடக்கம் தான் மக்கள் ஐடி திட்டத்தை தொடங்க இருக்கிறது. (ஸ்டேட் பேஃமிலி டேட்டா பேஸ்) சமுதாய மறுமலர்ச்சிக்கான திட்டம் தான் இது. ஆதாரின் பயனும் திட்டமும் வேறு, மக்கள் ஐ.டி யை (ஸ்டேட் பேஃமிலி டேட்டா பேஸ்)ன் திட்டமும் பயனும் வேறு. ஆன்லைன் ரம்மி பலருடைய உயிரைக் குடித்திருக்கிறது.அது வேண்டாமென்பது தான் எங்களின் எண்ணம் என்று கூறினார்.

இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்

click me!