பேருந்தின் மீது ஏறி அடாவடி செய்யும் கல்லூரி மாணவர்கள்

Published : Jan 03, 2023, 06:14 PM IST
பேருந்தின் மீது ஏறி அடாவடி செய்யும் கல்லூரி மாணவர்கள்

சுருக்கம்

சென்னையில்  பரபரப்பான சாலையில் கல்லூரி மாணவர்கள் பலர் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில் மாநகரப் பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பேருந்து மீது ஏறி ஆட்டம் போடுவது, செல்ஃபி எடுப்பது போன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே செல்லும் பேருந்தில் மாணவர்கள் பலர் பேருந்தின் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தனர். வேறு சில மாணவர்கள் அவர்களை போட்டு எடுத்து உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் பலமுறை வலியுறுத்தியும் தங்கள் இஷ்டத்துக்கு பேருந்தின் மீது ஏறி கூத்தடித்தனர். கல்லூரி மாணவர்களின் இந்த அட்டூழியத்தைத் தட்டிக்கேட்க காவல்துறையினரும் அந்தப் பகுதியில் இல்லாததால் பயணிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பணி ஆணை முதல் கழிவரை ஒப்பந்தம் வரை.. புகுந்து விளையாடிய KN நேரு.. மொத்த வசூல் ரூ.1020 கோடியாம்
கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!