குட்நியூஸ்.. நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Jan 3, 2023, 10:42 AM IST
Highlights

ஆண்டுதோறும் தை மாதம் ஹெத்தை ஹப்பா எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவானது முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் தை மாதம் ஹெத்தை ஹப்பா எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவானது முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்காக 25 நாட்களுக்கு முன்னர் விரதம் இருத்தல், ஒவ்வொரு விழாக் காலங்களில் ஒவ்வொரு ஞாயிறன்றும் அம்மன் அருள் வாக்கு ஆகியவை இடம் பெறுகின்றன. படுகர் இனத்தவர் பாரம்பரிய உடையுடன், பாரம்பரிய வண்ணக் குடைகளுடன் மடிமனை பகுதிக்கு சென்று அங்கு தங்கி அம்மனை வழிபடுகின்றனர்.

குறிப்பாக காரக்கொரை, போதனெட்டி, பேரொட்டி, வள்ளிக்கரை, மஞ்சுதலா,  சின்ன பிக்கட்டி,  பெரிய பிக்கட்டி என 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் இத்திருவிழாவை கொண்டாடி மகிழ்வர். இந்த திருவிழா நாளை நடைபெறுவதையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 21ம் தேதி வேலை நாட்கள் என தெரிவித்துள்ளார். 

click me!