கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்.. யார் இவர் தெரியுமா?

Published : Dec 27, 2022, 10:48 AM IST
 கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்.. யார் இவர் தெரியுமா?

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் நீலகிரி மாவட்ட எஸ்.பி.யும், தற்போது சிபிஐ எஸ்.பி.யாக உள்ள  முரளி ரம்பாவிற்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு அண்மையில் மாற்றப்பட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு சம்மந்தமாக கடந்த ஒருவருட காலமாக சசிகலா, மருது அழகுராஜ், ஆறுகுட்டி உள்ளிட்ட 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து, 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை ஆவண நகல்களை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் தான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இவர் இருந்தார். இந்நிலையில், தான் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் முடிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். தற்போது அவர் மத்திய அரசு பணியான சிபிஐயில் எஸ்.பி.யாக உள்ளதால்அவருக்கான சம்மன் சிபிஐ தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஜனவரி முதல் வாரத்தில் எஸ்.பி. முரளி ரம்பா சிறப்பு புலனாய்வுத்துறை முன் ஆஜராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!