பிரியாவை போன்று மற்றொரு சம்பவம்.. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8வது நாளில் இளம்பெண் உயிரிழப்பு.!

Published : Nov 22, 2022, 08:20 AM ISTUpdated : Nov 22, 2022, 08:24 AM IST
பிரியாவை போன்று மற்றொரு சம்பவம்.. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8வது நாளில் இளம்பெண் உயிரிழப்பு.!

சுருக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அனுசுயா. கர்ப்பமாக இருந்த அனுசுயாவுக்கு கடந்த 10-ம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் 8 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக கடந்த 28ம் தேதி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த 8ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். பிரியா மரணத்திற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மருத்துவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்நிலையில், அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. 

இதையும் படிங்க;- பிரியா மரண வழக்கு! கைவிரித்த கோர்ட்! போன் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு டாக்டர்கள் தலைமறைவு.. பிடிக்க 3 தனிப்படை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அனுசுயா. கர்ப்பமாக இருந்த அனுசுயாவுக்கு கடந்த 10-ம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து 24 மணி நேரம் ஆகியும் அனுசியா மயக்கமாக நிலையிலேயே இருந்துள்ளார்.

இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அனுசுயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- எமன் ரூபத்தில் வந்த கடற்கரை பேருந்து! தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி! வயிற்றிலேயே குழந்தை பலி.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!