ஆற்று வெள்ளத்தில் அடித்து செலப்பட்ட பெண்கள்… நீலகிரி அருகே நிகழந்த அதிர்ச்சி சம்பவம்!!

By Narendran SFirst Published Dec 13, 2022, 9:09 PM IST
Highlights

நீலகிரி அருகே கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்கள் 4 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் மூவர் உயிரிழந்ததோடு ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி அருகே கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்கள் 4 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் மூவர் உயிரிழந்ததோடு ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் இருக்கும் ஆணிக்கல் மாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்காக அப்பகுதியை சுற்றியுள்ள அனைவரும் அந்த கோயிலுக்கு சென்றிருந்தனர். 

இதையும் படிங்க: வேளாண் வணிகத்துறையில் 14 பேருக்கு வேலை... பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

அந்த கோயிலுக்கு அப்பகுதியில் உள்ள கெதறல்லா ஆற்றை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ள நிலையில் அந்த பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலுக்கு சென்ற மக்கள் வீடு திரும்பும் போது வெள்ளப்பெருக்கில் சிக்கினர். மேலும் 4 பெண்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள், அப்பகுதி மக்களின் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: வெளியானது தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கித்தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். நள்ளிரவு வரை நடைபெற்ற தேடுதல் பணியில் வெள்ளத்தில் சிக்கிய 4 பெண்களில் 3 பேரின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுக்குறித்த விசாரணையில் அவர்கள் கவரட்டி, ஜெக்கலொரை என்ற இடத்தைச் சேர்ந்த சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா என்பது தெரியவந்துள்ளது.  

click me!