கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோய்.. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

By Raghupati RFirst Published Jan 3, 2023, 9:41 PM IST
Highlights

கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த சில வாரங்களாக கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

பல கிராமங்களில் அம்மை நோயால் மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனால் கால்நடை வளர்ப்போர் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்கள்தான் மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்க்கின்றனர். கால்நடைகள்தான் அவர்களின் வாழ்வாதாரம். நோய் தாக்குதலில் மாடுகள் இறந்தால், ஏழைகளின் குடும்பத்தின் ஓராண்டுக்கான வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து விடும்.

இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசும், கால்நடை பராமரிப்புத் துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அம்மை நோய் பரவல் குறித்து, கால்நடை பராமரிப்புத் துறை போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என, பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியம் தாமதிக்காமல், கால்நடை பராமரிப்புத் துறை, அம்மை நோயைக் கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு, தடுப்பூசி செலுத்த வேண்டும். அம்மை நோயால் மாடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.கிராமங்களில் கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதாக பல இடங்களில் மக்கள் புகார்.தெரிவிக்கின்றனர்.

எனவே, கால்நடை மருத்துவர் காலிப் பணியிடங்களை உடண்டியாக நிரப்ப வேண்டும். கால்நடை மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் முழுமையாக பணியில் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்

click me!