மாநகராட்சி மேயர்கள் உள்ளிட்ட பலருக்கு தற்போது மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தாங்கள் 24 மணி நேரமும் மக்களின் தேவைக்காக பணியாற்றி வருவதாகவும், ஆகவே தங்களுக்கு தமிழக அரசு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கையை வைத்தனர் மாநகராட்சி மேயர்கள் உள்ளிட்ட பலர்.
தற்பொழுது அவர்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோரிக்கை வைத்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
யார் யாருக்கு மாதாந்திர மதிப்பூதியம்?
மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
நகராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்.
பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.
கலைஞரின் எழுத்துகளை படித்தால் மட்டும் தான் எதிர்கால தமிழ் சமுதாயம் முன்னேறும் - ஆ.ராசா பேச்சு
எவ்வளவு மதிப்பூதியம் வழங்கப்படும்.
மேயர்கள் - 30,000 ரூபாய்
துணை மேயர்கள் - 15,000 ரூபாய்
மாமன்ற உறுப்பினர்கள் - 10,000 ரூபாய்
நகராட்சி மன்ற தலைவர்கள் - 15,000 ரூபாய்
துணைத் தலைவர்கள் - 10,000 ரூபாய்
நகர் மன்ற உறுப்பினர்கள் - 5,000 ரூபாய்
பேரூராட்சி தலைவர்கள் - 10,000 ரூபாய்
துணைத் தலைவர்கள் - 5,000 ரூபாய்
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் - 2,500 ரூபாய்
ஸ்டாலின் தலைமையிலான அரசு தங்களது நிர்வாக திறனை மேன்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
திமுக அரசை விடாமல் தாக்கும் அதிமுக..! அடுத்த போராட்டத்திற்கு தேதி அறிவித்த எடப்பாடி பழனிசாமி