ஆவின் பால் கொள்முதல் விலை: அமைச்சர் சொன்ன தகவல்!

By Manikanda Prabu  |  First Published Jul 13, 2023, 5:31 PM IST

அனைத்திற்கும் ஜிஎஸ்டி போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்


கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பால்பண்ணையினை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்குள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள், அவற்றின் பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டிங் செய்யப்படுவதையும் ஆய்வு செய்தார். 

இதையடுத்து, அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள், கருவூட்டுனர்கள், மற்றும் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். அதன்படி, 124 பயனாளிகளுக்கு 2.23 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

தக்காளி பெட்ரோலோடு போட்டி போடுகிறது; இனியும் வேடிக்கை பார்க்க வேண்டாம் - மத்திய அரசுக்கு உதயநிதி கோரிக்கை

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவின் ஒரு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். இதன் மூலம் பலருக்கும் நன்மைகள் உள்ளது. இத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஆவினை பொறுத்தவரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், காப்பீடு திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். யார் வேண்டுமென்றாலும் ஆவின் நிர்வாகிகள், அல்லது DR யை சந்தித்து பேசலாம், அவர்கள் உங்களுக்கு முறையாக வழிக்காட்டுவார்கள் என்ற உத்தரவாதத்தை இத்துறையின் அமைச்சராக நான் கூறி கொள்கிறேன்.” என்றார்.

விவசாயிகள் தரும் பாலுக்கு விலையை கூடுதலாக தர வேண்டும் என கூறுவதில் நியாயம் இருப்பதை மறுக்கவில்லை என்ற அமைச்சர் மனோ தங்கராஜ், தற்போது அனைத்திற்கும் ஜிஎஸ்டி போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம் என வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “எங்கெல்லாம் பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சொசைட்டி ஆரம்பிக்கும் பணிகளை செய்ய உள்ளோம். நாம் எடுத்துள்ள முயற்சிகளால் 6 சதவீதம் மின் கட்டணம் குறைந்துள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து செல்கின்ற அரசைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்று கூறுகிறார். ஒரு சார் மட்டும் பயனடைந்தார்கள் என்று இருக்க கூடாது என்பது தான் இந்த அரசின் கொள்கை. ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு வழங்கலாம் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அனைவரும் இணைந்து இந்த பொதுத்துறையை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வோம்.” என தெரிவித்தார்.

click me!