நண்டு சாப்பிட்ட புதுமணப் பெண்.. மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு.. கதறிய கணவர்..!

Published : Jul 13, 2023, 03:50 PM IST
நண்டு சாப்பிட்ட புதுமணப் பெண்.. மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு.. கதறிய கணவர்..!

சுருக்கம்

கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் சுரேஷ்குமார். இவரது மனைவி கிருபா (25). இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 

திருமணமாகி 3 மாதங்களேயான புதுமணப்பெண் நண்டு சாப்பிட்ட போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் சுரேஷ்குமார். இவரது மனைவி கிருபா (25). இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.  தேனிலவுக்காக குமரி மாவட்டத்தில் உள்ள சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள தனியார்
சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில் விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த கிருபாவுக்கு திடீரென விக்கல் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கிருமா சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். கிருபாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெக தலைவருக்கு சரியான ஆலோசனை இல்லை – 2ஆம் கட்ட தலைவர்களை குற்றம் சாட்டிய தாடி பாலாஜி!
கதறி அழுத அன்பில் மகேஷ்..!கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி.. உலுக்கும் வீடியோ