கரூர் மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் பொது வெளியில் சமையல் கேஸ் சிலிண்டர்களை குவித்து வைத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள்.
கரூர் மாநகரில் சின்ன ஆண்டான் கோவில் சாலையில் சக்தி கேஸ் ஏஜென்சீஸ், கெளரி புரத்தில் ஏ.ஏ. கேஸ் ஏஜென்சி எனும் பெயரில் இண்டேன் கேஸ் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு இந்த கேஸ் ஏஜென்சிகள் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு என்று குடோன்கள் நகரை விட்டு வெளிப் பகுதியில் 7 கி.மீ தொலைவில் வைத்துள்ளனர். பெரிய லாரிகளில் சிலிண்டர்கள் கொண்டு வரப் பெறும் கேஸ் சிலிண்டர்கள் குடோன்களில் அடுக்கி வைக்கப் படுகின்றன.
மேற்குப் பகுதிகளான வடிவேல் நகர், வேலுச்சாமி புரம், காயத்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய சிலிண்டர்களை சிறிய சரக்கு வாகனங்களில் எடுத்து வந்து கரூர் - சேலம் பை-பாஸில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் பாதுகாப்பு இன்றி பொது வெளியில் வைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனம் மூலம் சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
undefined
வேலூரில் கோவிலை கைப்பற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை விரட்டியடித்த பொதுமக்கள்
சிலிண்டர்கள் இறக்கி வைக்கப்படும் இடம் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை பழுது நீக்கும் பட்டறைகள் நிறைந்த பகுதி. ரயில்வே பாதையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள பகுதி மற்றும் மேம்பாலத்திற்கு அடியில் சுமார் 100 கேஸ் நிரம்பிய சிலிண்டர்களும், 50க்கும் மேற்பட்ட காலி சிலிண்டர்களும் அங்கு அடுக்கி வைத்துள்ளனர்.
ஆம்பூரில் மருதாணி வைத்ததற்காக ஆசிரியர் தாக்கியதில் 8ம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம்
ஊழியர்கள் அவரவர் பங்கிற்கு சிலிண்டர்களை கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அந்த சிலிண்டர்கள் எந்தவித கேட்பாரின்றி அங்கு இருக்கிறது. ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் மது போதையில் பலரும் படுத்து இருக்கின்றனர். யாரேனும் புகைப் பிடித்தாலோ அல்லது அருகில் இருக்கக் கூடிய உணவகங்கள், லாரி பட்டறைகளிலிருந்து தீப் பொறிகள் பறந்து வந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆபத்தை உணராமல் செயல்படும் கேஸ் சிலிண்டர் ஏஜென்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.