50 கிலோ தக்காளியை எப்படி 700 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவது? இது திண்டுக்கல் சிக்கல்!!

By Velmurugan s  |  First Published Jul 13, 2023, 2:55 PM IST

தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் தக்காளி விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு கடைக்கும் தலா 50 கிலோ தக்காளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பம்.


நாடு முழுவதும் தற்போது வரலாறு காணாத விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலரும் தக்காளி இல்லாமல் சமைத்து வருகின்றனர். ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கடந்த சில நாட்களாகவே விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி தமிழக முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. 

இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் மட்டும் மொத்தம் 45 நியாய விலைக் கடைகள் உள்ளன. முதல் நாளான இன்று மட்டும் 10 கடைகளுக்கு ஒரு கடைக்கு 50 கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டுள்ளன. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ என மட்டும் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1124 கடைகளுக்கும் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை; கனிமொழியின் வாகனத்தை திடீரென மறித்த கிராம மக்களால் பரபரப்பு

தற்போது ஒரு கடைக்கு 50 கிலோ மட்டும் வழங்கப்பட்டு இருப்பதால், மக்களிடயே குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ஒரு நியாய விலைக் கடைக்கு 700 முதல் 1500 வரை ரேஷன் கார்டுகள் உள்ளன. அப்படி இருக்கையில் எப்படி 50 கிலோ போதுமானதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை முதல் அனைத்து கார்டுகளுக்கும் தக்காளி வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிய பாஜகவினர்; தடுத்து நிறுத்திய திமுகவினரால் பரபரப்பு

click me!