வேலூரில் முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவன உதவியுடன் 21 லட்சத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பல்லாலகுப்பம் குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் அருகே இருக்கும் தனியார் பள்ளியை நோக்கி செல்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூலி வேலை, விவசாயம் செய்து குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர் கயிலைநாதன் இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தை அணுகி உதவி கோரியுள்ளார். அதற்கு தொண்டு நிறுவனம் சார்பில், சுமார் 14 லட்சம் வழங்கி உள்ளனர். மேலும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பெரியவர்கள் இணைந்து ரூ.7 லட்சத்தை வசூலித்து கொடுத்துள்ளனர்.
undefined
தமிழகத்தில் மதுவிலக்கு துறையை மது விற்பனை துறை என பெயர் மாற்றலாம் - அன்புமணி காட்டம்
இந்த பணத்தைக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள்ளேயே கூடுதலாக பள்ளி கட்டிடத்தை கட்டி உள்ளனர். இங்கு தனியார் பள்ளிக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வியும் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கம்ப்யூட்டர், லேப்டாப், ப்ரொஜெக்டர் என அனைத்து வசதிகளுடன் இந்த கட்டிடம் திறக்கப்பட உள்ளது. இதனால் வருகின்ற கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என தலைமை ஆசிரியர் பெருமிதம் கொண்டு உள்ளார்.
தலைமையாசிரியரின் இந்த விடாமுயற்சியால் 21 லட்சம் மதிப்பீட்டில் இந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டியது பொதுமக்கள், பெற்றோர்களும் தலைமை ஆசிரியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.