திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற வாலிபர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரழந்தார்.
திருப்பத்தூர்மாவட்டம் ஆம்பூர் நகரில் ஆம்பூர் அடுத்த சோலூரை சேர்ந்தவர் ரித்திக் ரோஷன் (வயது 33). இவர் இருசக்கர வாகனத்தில் மாதனூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான சோலூருக்கு ரித்திக் ரோஷன் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற லாரியை முந்துவதற்கு ரித்திக் ரோஷன் முயற்சித்தார்.
ஆம்பூர் அருகே ராஜூவ் காந்தி சிலை அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதால் குறைந்த வேகத்தில் லாரி சென்றுகொண்டிருந்தது. இருசக்கர வாகனம் லாரியை முந்த முயன்ற போது இருசக்கர வாகனம் லாரிக்கு அடியில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரித்திக் ரோஷன் பலியானார்.
undefined
குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை; கனிமொழியின் வாகனத்தை திடீரென மறித்த கிராம மக்களால் பரபரப்பு
இது குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரித்திக் ரோஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிய பாஜகவினர்; தடுத்து நிறுத்திய திமுகவினரால் பரபரப்பு