வேலூரில் கோவிலை கைப்பற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை விரட்டியடித்த பொதுமக்கள்

By Velmurugan sFirst Published Jul 12, 2023, 12:57 PM IST
Highlights

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோவிலை கைப்பற்ற வந்த அரசு அதிகாரிகளை 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த 66 புத்தூர் கிராமத்தில் அசரீர் மலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை முறைப்படி கைப்பற்ற விட்டதாக அறிவிக்கப்பட்டது. 

கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக ராஜம்மாள், அறங்காவலர்களாக மணி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. அதில் இரு தரப்பினரும் பேசியும் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. 

தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம் - எச்.ராஜா பகீர் தகவல்

அதனால் இரண்டாவது கட்டமாக காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. இதற்கு 66 புத்தூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் திரண்டு கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் மாலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்பாடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கோவிலை கையகப்படுத்த சென்றனர்.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலி

ஆனால் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

click me!